கமுதி அருகே வேளாண் கல்லூரியில் மகளிர் தின விழா

கமுதி, மார்ச் 11: கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் உலக மகளிர் தினம் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கமுதி, பேரையூர் மற்றும் முதுகுளத்தூர் பகுதிகளில் பல துறைகளில் சாதித்து கொண்டிருக்கும் 5 பெண்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கவுரவ படுத்தப்பட்டனர்.

இதில் பேரையூர் ஊராட்சி தலைவர் ரூபி கேசவன், முதுகுளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சத்யா, பேரையூர் நடுநிலைபள்ளி உதவி தலைமையாசிரியர் அன்னக்கிளி, பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெயசுமதி, மற்றும் கமுதி வருவாய் அலுவலர் பரமேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

உதவி பேராசிரியர் நவீன் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி தலைவர் அகமது யாசின் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார் தலைமையுரை வழங்கினார். விழாவின் முக்கிய பகுதியாக சிறப்பு விருந்தினர்களை கவுரவித்து, பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டன. மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். விழாவின் நிறைவாக கல்லூரியின் துணை முதல்வர் திருவேணி நன்றியுரை ஆற்றினார்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்