கந்தர்வகோட்டை பகுதியில் பறக்கும் படை சோதனையில் 57,000 ரொக்கம் சிக்கியது

கந்தர்வகோட்டை, மார்ச் 24:கந்தர்வகோட்டை பகுதியில் பறக்கும்படை சோதனையில் ரூ.57 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில், திருச்சி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் பறக்கும் படையினர் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாகன சோதனையில் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.

இதன்படி நேற்று (23ம் தேதி) காலையில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு கார்த்திக் ராஜா தலைமையில் பறக்கும் படையினர் புதுப்பட்டி அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கு அருகில் டாட்டாஸ் வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது, தச்சன்குறிச்சி பிரான்சிஸ் சேவியர் மகன் ப்ராங்கிளில் (24) என்பவர் வைத்திருந்த 57 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றி கந்தர்வகோட்டை தாசில்தார் விஜயலட்சுமி, தேர்தல் துணை தாசில்தார் பால்பாண்டி வசம் ஒப்படைத்தனர். இத்தொகை சார்- கருவுலகத்தில் செலுத்தப்பட்டது.

Related posts

ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

டயர் வெடித்ததால் சென்டர் மீடியனில் மோதிய தனியார் பஸ்

கல்லூரி வேன் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது