கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

 

கந்தர்வகோட்டை,ஜூலை 10: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெரியகோட்டை, கொத்தகப்பட்டி இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலுடன் கலந்தலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்றது .பெரியக்கோட்டையில் நடைபெற்ற கலந்து ஆலோசனை கூட்டத்தில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கொத்தகப்பட்டியில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் . இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா அறிவுரை வழங்கி பேசியதாவது: மாலை நேரங்களில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மையத்திற்கு வருகை தராத மாணவர்களை மையத்திற்கு தொடர்ந்து வருகை தர வேண்டும். இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெறும் கற்றல் கற்பித்தல் முறைகள் சிறப்பாக மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மையத்திற்கு தொடர்ச்சியாக வரும் மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

அடிப்படை திறன்களான தமிழ், ஆங்கிலம் வாசித்தல் கணக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் அடிப்படை திறன்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்கநிலை மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருவதாகவும் உயர் தொடக்கநிலை அறிவியல் சோதனைகள் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனை அந்தந்த பகுதியில் உள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னார்வலர்கள் மையத்திற்கு தொடர்ச்சியாக வராத மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தெரிவித்து மையத்திற்கு வருமாறு அறிவுறுத்த வேண்டும். மாதம் தோறும் நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பெற்றோர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் கொத்தகப்பட்டி ஆசிரியர்கள் கலைமணி சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பெரிய கோட்டை தன்னார்வலர்கள் பரமேஸ்வரி, கலைமதி மீனா, பிரியா உள்ளிட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை