கந்தர்வகோட்டை அருகே குறுவை நெல் நடவு பணி மும்முரம்

 

கந்தர்வகோட்டை, ஜூலை19: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள கடலைப் பயிரில் களை பறித்து ஜிப்சம் உரமிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது விவசாயத்திற்கு தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைப்பதால் விவசாயிகள் உற்சாகமாக விவசாய பணிகளை மும்மரமாக செய்து வருகின்றனர்.

மேலும் குறுவை நடவு பணிகளுக்கு ஆழ்துளை கிணற்று நீரை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்த பின் இப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உரிய விலையில் கொள்முதல் செய்து, பணமும் உடனுக்குடன் கிடைப்பதாக விவசாயிகள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை