கந்தசாமி கோயிலில் கிருத்திகை வழிபாடு

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அடுத்த காளிப்பட்டியில் உள்ள கந்தசாமி கோயிலில், மாசி மாத வளர்பிறை கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயில் உட்பிரகாரத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் முத்தங்கி அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். இதில் சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் என பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், வையப்பமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில், பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிசேகம் செய்து, பூஜைகள் நடந்தது. பெண்கள் கோயில் முன்பு நெய் தீபம் ஏற்றி, உப்பு மிளகு போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்