கணவருடன் ஏற்பட்ட தகராறில் 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய்

ராய்காட்: தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் காரவலி கிராமத்தில் கணவருடன் வசித்து வந்த 30 வயதான இளம்பெண்ணுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். 18 மாத பச்சிங்குழந்தை உட்பட மற்ற அனைவருமே 10 வயதிற்கு உட்பட்டவர்கள்தான். 6 குழந்தைகளில் 5 குழந்தைகள் பெண் குழந்தைகள். கணவன் – மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். மேலும் கணவரின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை தாக்கி உள்ளனர். இதனால் அவர்கள் மீது காட்டவேண்டிய கோபத்தை, தனது குழந்தைகளை அடித்து தாக்கி வந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்னையால் மன உளைச்சலில் இருந்த அந்த பெண், அப்பகுதியில் உள்ள கிணற்றில் ஒவ்வொரு குழந்தையாக வீசியுள்ளார். அதனால் 5 பெண் குழந்தைகள் உட்பட 6 குழந்தைகளும் நீரில் மூழ்கி பலியாகினர். தகவலறிந்த போலீசார், நீரில் மூழ்கிய 6 குழந்தைகளையும் மீட்டனர். குற்றம்சாட்டப்பட்ட கொடூர தாயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்….

Related posts

பாலியல் புகார் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது

மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுடன் செல்ல மாட்டார்: தேஜஸ்வி யாதவ் கருத்து

என்னையும் சித்தராமையாவையும் அழிக்க கேரளாவில் சத்ரு பைரவி யாகம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பரபரப்பு