கடையநல்லூரில் கல் தட்டி விழுந்த பள்ளி மாணவர் சாவு

கடையநல்லூர், ஏப்.3: கடையநல்லூர் மதீனா நகரைச் சேர்ந்த நயினார் முகம்மது மகன் முஹம்மது மைதீன் (16). இவர் அப்பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது ரமலான் நோன்பு வைத்திருந்த முகம்மது மைதீன் பள்ளிவாசலில் நோன்பு திறந்துவிட்டு காயிதே மில்லத் திடல் வழியாக வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடலில் கீழே கிடந்த கல் தடுக்கி மூஞ்சி குப்புற விழுந்ததில் மூக்கில் அடிபட்டு படுகாயமடைந்து மயங்கினார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை