கடலாடியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை

 

சாயல்குடி, அக். 16: கடலாடியில் மழைக்கால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்திரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடலாடி பஞ்சாயத்தில் பி.டி.ஓ ராஜா தலைமையிலும், பஞ்சாயத்து தலைவர் ராஜமாணிக்கம் லிங்கம் முன்னிலையிலும் மராமத்து பணிகள் நடந்தது.

ஆப்பனூர், மங்களத்திலிருந்து கடலாடி வரும் மழைநீர் வரத்து கால்வாய், வில்வநாதன் கோயில் வரத்து கால்வாய் நூறு நாள் பணியாளர்கள் கொண்டு சீரமைக்கப்பட்டது. இதனை போன்று கடலாடி பஸ் ஸ்டாண்ட், யூனியன் முக்குரோடு பகுதி, அரசு மேல்நிலை தெரு, சந்தனமாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட மழைநீர் வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டது. எளிதில் மழைதேங்கும் இடங்களில் கட்டிட கழிவுகள், மண் அடிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை