கடமலைக்குண்டுவில் வணிக வளாக பூட்டு உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலை

 

வருசநாடு, ஜூலை 13: கடமலைக்குண்டு அருகே பாலுத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை (39). கடமலைக்குண்டு மெயின்ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். கடந்த 9ம் தேதி இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை டீ குடிக்க கடை பக்கமாக வந்துள்ளார்.

அப்போது வணிக வளாக இரும்பு கேட்டில் இருந்த பூட்டு உடைந்த நிலையில் இருந்துள்ளது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டதில், வணிக வளாக கடையில் இரும்பு கேட் பூட்டை உடைத்து சிலர் திருட முயற்சித்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பிச்சை கொடுத்த புகாரில் கடமலைக்குண்டு எஸ்.ஐ., வரதராஜன் தீவிர விசாரணை செய்து வருகிறார்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை