கஞ்சா விற்ற இருவர் கைது

 

மண்டபம், ஜூன் 24: மண்டபம் பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து எஸ்பி., தங்கதுரைக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், எஸ்பி., சிறப்பு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், ரயில்வே ஸ்டேஷன் எதிரே காலி இடத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், மண்டபம் மாரீஸ்வரன் எனவும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

அவரது தகவல் படி, மண்டபம் பிரதீப் 20, சதீஷ்குமார் 30 ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சதீஷ்குமார் என்பவர் இறால் ஏற்றுமதி நிறுவனம் அருகே காட்டு கருவேல் மரப்புதரில் கஞ்சாவை சிறு, சிறு பொட்டலம் போட்டு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது