ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்

திருச்செங்கோடு, ஏப். 11: திருச்செங்கோடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் 32வது பேரவைக்கூட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் நடராஜன் வரவேற்றார். செயலாளர் சுப்ரமணியம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் சுப்ரமணியம் வரவு செலவு அறிக்கை படித்தார். கூட்டத்தில் 75 வயது நிறைவடைந்த சங்க உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட தலைவர் கேசி கருப்பன் பேசினார். இதில், ரங்கராஜன், வீரபத்ரன், பட்டாபிராமன், காளியப்பன், நடேசன், முத்துசாமி உள்ளிட்ட பலர் பேசினர். கூட்டத்தில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல், தமிழக அரசும் மருத்துவ படி ₹1000 வழங்க வேண்டும். 70 வயது நிரம்பியவர்களுக்கும், 80 வயதை கடந்தவர்களுக்கும் 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணை செயலாளர் வீரமணி நன்றி கூறினார்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு