ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்

சிங்கம்புணரி, ஏப். 11: சிங்கம்புணரி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் காலப்பூரில் நடைபெற்றது. வட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். செயலர் சுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். இதில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. தலைவராக தனுஷ்கோடி, துணை தலைவராக குருசாமி, செயலாளராக சுப்ரமணி, பொருளாளராக சுப்பையா, மாவட்ட பிரதிநிதி ராமையா உள்ளிட்ட நிர்வாகிகளை மாநில செயலாளர் முத்துராமலிங்கம் வாழ்த்தி பேசினார். இதில் ஏராளமான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு