ஒரே ஆண்டில் ரயிலில் அடிபட்டு 100 பேர் பலி 17 பேரை அடையாளம் காண தனிப்படை தீவிர விசாரணை

திண்டுக்கல்: தமிழகத்தில் ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள மாவட்டங்களில் திண்டுக்கல் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, வடமதுரை, அய்யலூர், கொடைரோடு, அம்பாத்துறை ஆகிய ஊர்களில் ரயில் நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தின் வழியாக 110 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக நகரம், கிராமங்கள், மலைப்பகுதி வழியாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் தண்டவாளத்தை கடக்க முயலும் மனிதர்கள், ஆடுகள், மாடுகள் ரயிலில் அடிபட்டு இறப்பது அடிக்கடி நிகழ்கிறது. இதுதொடர்பாக ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் விபத்துகள் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் 100க்கும் மேற்பட்டவர்கள் ரயிலில் அடிபட்டு இறந்து உள்ளனர். இதில், 17 பேர் அடையாளம் தெரியவில்லை. எனினும், 17 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ரயில்வே போலீசாரால் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன. இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, 17 பேரை அடையாளம் காண ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இவர்கள் 17 பேரின் புகைப்படம், அங்க அடையாளங்களை வைத்தும், விபத்து நடந்த இடத்துக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்களுக்கு சென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை