ஐஸ்கிரீம் வாங்கிகொடுக்காத தகராறு: போதையில் ஆள்மாறி வாலிபர் மீது தாக்குதல்

அண்ணாநகர்: சென்னை டி.பி.சத்திரம் லட்சமி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர், நேற்று இரவு தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 4 பேர் கும்பல், “நம்மிடம் தகராறு செய்தவன் இவன்தான்” என கூறி திடீரென மணிகண்டனை சரமாரி தாக்கியுள்ளனர்.  இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் மாமா ராமநாதன் (38) என்பவர், ஓடிவந்து  கும்பலை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல், ராமநாதனையும் சரமாரி தாக்கிவிட்டு அங்கிருந்து  தப்பியது. இதுகுறித்து டி.பி.சத்திரம் காவல்நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று காமராஜ்நகர் பகுதியில் சுற்றித்திரிந்த 4 பேர் கும்பலை பிடித்து விசாரித்தபோது, மணிகண்டனை தாக்கியவர்கள் என்பதும், டி.பி.சத்திரம் காமராஜ்நகர் பகுதியை சேர்ந்த கோழி (எ) பிரசாந்த் (19), ஆகாஷ் (22), அபினாஷ் (22), மற்றொரு மணிகண்டன் (24) என்பது தெரியவந்தது. மேலும் ஐஸ்கீரீம் வாங்கி கொடுப்பதில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் சுரேஷ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த வந்துள்ளனர். குடிபோதையில் ஆள் மாறி மணிகண்டனை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

Related posts

ஆர்.கே.பேட்டையில் குடும்பத் தகராறில் மனைவி கழுத்தறுத்து படுகொலை: ராணுவ வீரர் கைது

கிருஷ்ணகிரிக்கு தஞ்சையிலிருந்து 2 ஆம்னி பஸ்களில் கடத்தி வந்த 17 உடும்புகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ₹1.25 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்