ஏஐடியுசி மாவட்டக்குழு கூட்டம்

 

சிவகங்கை, நவ. 1: சிவகங்கையில் ஏஐடியுசி மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் காளைலிங்கம் தலைமை வகித்தார். இ.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கண்ணகி, ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் மீனாள்சேதுராமன், மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், மாநில துணைத்தலைவர் மனவழகன் வாழ்த்தி பேசினர். மாவட்ட செயலாளர் ராஜா, துணை செயலாளர் கண்ணன், துணைத்தலைவர் சகாயம் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

சென்னையில் நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், காளையார்கோவிலில் நடைபெறம் விவசாயிகள் சங்க மாநாட்டு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொள்வது, தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தவர்கள் அலைக்கழிக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடந்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தேசிய விழிப்புணர்வு கருத்தரங்கு

புதியம்புத்தூர் அருகே யூனியன் பள்ளியில் கோள்கள் திருவிழா

திருச்செந்தூரில் நடந்த ஜமாபந்தியில் உடன்குடியில் அடிப்படை வசதி நிறைவேற்ற வலியுறுத்தி மனு