எழும்பூரில் மொபட்டில் சென்ற பெண் போலீசிடம் செயின் பறிப்பு: ஆசாமிகளுக்கு வலை

சென்னை: பைக்கில் சென்று கொண்டிருந்த பெண் போலீசிடம் கத்திமுனையில் செயின் பறித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். எழும்பூர் பகுதியில் போலீசாக பணியாற்றி வருபவர் பிரியா. இவர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் அதே பகுதியில் சென்று கொண்டிருந்தார். போலீஸ்  மெஸ் அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில்  எதிரே வந்த 2 பேர், இவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி, அவர் கழுத்தில் கிடந்த 2 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து பிரியா எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்….

Related posts

தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு 16 வயது சிறுவனை கடத்திய 2 குழந்தைகளின் தாய் கைது

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு