எலி பேஸ்ட் விற்றால் கடும் நடவடிக்கை

 

சிவகங்கை, மே 25: சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எலிபேஸ்ட் என்ற 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த அங்கீகாரம் பெறாத பூச்சிக்கொல்லி மருந்துகள் தற்கொலைக்காக பொதுமக்களிடையே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த வகை மருந்துகள் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு நிரந்தரமாக தடை விதித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள தனியார் பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள், பலசரக்கு கடைகள் மற்றும் பிற நிறுவனங்களில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த எலிபேஸ்ட் என்ற மருந்தினை விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சுற்றுச்சூழல் மற்றும் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எலிபேஸ்ட் மருந்தினை வாங்கி பயன்படுத்த வேண்டாம். இதற்கான மாற்று மருந்து விபரங்களை வேளாண்மை துறை அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் வாங்கி பயன்படுத்த வேண்டும். இனிவரும் காலங்களில் ஏதேனும் விற்பனை நிலையங்களில் எலி பேஸ்ட் மருந்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த விற்பனை நிலையங்கள் மீது பூச்சி மருந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்