எர்ணாவூர் பாரத் நகர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை; தண்டவாளத்தில் சடலம் வீச்சு

திருவொற்றியூர்: எர்ணாவூர் பாரத் நகர் அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் சடலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எர்ணாவூர், பாரத் நகர் அருகே ரயில்வே தண்டவாள பகுதியில் நேற்று பலத்த வெட்டு காயங்களுடன் சுமார் 35 வயது மதிக்கதக்க ஆண்  சடலம் கிடப்பதை பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எண்ணூர் மற்றும் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால், இறந்தவர் யார் என குறித்து விவரம் தெரியவில்லை. இதனையடுத்து போலீசார், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்….

Related posts

மருமகனுடன் தகாத உறவு வைத்த பெண் கழுத்தை அறுத்து கொலை

பட்டா வழங்க ரூ.8,000 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை: 14 ஆண்டுகளுக்கு பின் தண்டனை

மபி, உத்தரகாண்ட் மாநிலங்களை அதிரவைத்த கொலை: 2 பயணிகள் ரயிலில் சிக்கிய பெண்ணின் உடல்பாகங்கள்