எம்ஏஎம் மெட்ரிக் பள்ளி 100 சதவிகித தேர்ச்சி

 

மேட்டூர், மே 22: மேட்டூர் மாதையன் குட்டையில் எம்.ஏ.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் பிளஸ்2 பொதுத் தேர்விலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்2 தேர்வில் இப்பள்ளி மாணவி அபிராமி 600க்கு 596 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவி அக்ஷயா 595 மதிப்பெண்ணும், மாணவர் நவீன்ராஜ் 583 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 2 மற்றும் 3ம் இடத்தை பெற்றனர். 10ம் வகுப்பு பொது தேர்வில் மாணவி நிஷாந்தினி 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தை பிடித்தார்.

மாணவர் சந்தோஷ் 482 மதிப்பெண்ணும், மாணவர் ஹரீஷ் 478 மதிப்பெண்களும் பெற்று 2 மற்றும் 3ம் இடத்தை பெற்றனர். பள்ளியில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவியரையும், 100 சதவீத தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்களையும், பள்ளி தாளாளர் ராஜசேகர், எம்ஏஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் விவேகானந்தன், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஆயிஷாநூர் ஆகியோர் சால்வை அணிவித்தும், பரிசு வழங்கி பாராட்டினர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்