என்னை கொல்ல சதி நடந்தது: தனுஸ்ரீ தத்தா பரபரப்பு புகார்

மும்பை: தனுஸ்ரீ தத்தா இந்தியில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் நானா படேகரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியிருந்தார். நானா படேகருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்திருந்தார். இதனால்தான் தனக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்று சொன்னார். இந்த விவகாரத்தால் சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து ஒதுங்கிய தனுஸ்ரீ தத்தா, மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணலின் போது அவர் அளித்த பதிலில், ‘உஜ்ஜைனி கோயிலுக்கு நான் சென்றிருந்தபோது, எனது கார் விபத்தில் சிக்கியது. அப்போது எனக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீள பல மாதங்கள் பிடித்தன. யாரோ எனது காரின் பிரேக்கை நீக்கியதால் இந்த விபத்து நடந்தது. அந்த சம்பவம் முடிந்த சில மாதங்களுக்கு பின்பு, எனது வீட்டிற்கு பெண் ஒருவர் வந்தார். அவரை எனது வீட்டில் வேலைக்கு அமர்த்தினேன். சில நாட்களுக்கு பின்பு எனக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. அந்தப் பெண் எனக்கு கொடுத்த தண்ணீரில் ஏதோ கலந்து கொடுத்திருப்பாரோ என்ற அச்சம் ஏற்பட்டது. என்னை கொல்வதற்காக அவரை சிலர் அனுப்பி இருப்பார்களோ என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது’ என்றார். …

Related posts

மேற்கு வங்க ரயில் விபத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது: ரயில்வே அமைச்சர் பதிவு