என்எஸ்எஸ் திட்ட முகாம்

சாயல்குடி, மார்ச் 29: கடலாடி அரசு கலை,அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் கடுகுசந்தை பஞ்சாயத்தில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடந்தது. கடலாடி அரசு கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ் திட்ட மாணவர்கள் சார்பில் கடுகுசந்தை பஞ்சாயத்தில் முகாம் நடந்தது, முகாமிற்கு கல்லூரி முதல்வர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார், அழகப்பா பல்கலைகழக நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார், கல்லூரி திட்ட அலுவலர் கலாதேவி வரவேற்றார்.

கடுகுசந்தை, சத்திரம், தேவர்நகர் ஆகிய கிராமத்திலுள்ள கோயில், தண்ணீர் பிடிக்கும் இடம், பள்ளி மற்றும் பொது இடங்களில் தூய்மை பணி, கிருமிநாசினி தெளித்தல், மரம் நடுதல் மற்றும் தூய்மை பணிகள் நடந்தது. மேலும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு ஒழிப்பு, மழைநீர் சேமிப்பு, இயற்கை மருத்துவம், உடல்நலன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முகாமில் கடுகுசந்தை பஞ்சாயத்து தலைவர் காளிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆங்கில துறை விரிவுரையாளர் கலையரசன் நன்றி கூறினார்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்