எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் ஆவுடையார்கோவில் அரசு பள்ளியில் தொடக்கம்

 

அறந்தாங்கி,ஜன.10: பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்துஅரசு பள்ளிகளிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற சிறப்பு திட்டம் மூலம் 8ம்தேதி முதல் 10ம்தேதி வரை தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் , முன்னாள் மாணவர்களைக் கொண்டு பள்ளியை தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் 2021-2022ம் நிதியாண்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், கூடலூர் முத்து,பாண்டியன், சிவகிருபாகரன், ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு