உ.பி.யில் பப்ஜி விளையாடியதை கண்டித்ததால் ஆத்திரம்.. பெற்ற தாயை சுட்டுக்கொன்ற 16 வயது சிறுவன்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ப‌ப்ஜி விளையாடுவதை கண்டித்த‌தால், பெற்ற தாயை 16 வயது சிறுவன் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் எல்சிடோ குடியிருப்பை சேர்ந்தவர் சாதனா. இவரது 16 வயது மகன் ப‌ப்ஜி விளையாட்டுக்கு அடிமையானதால், கடந்த ஞாயிறு அன்று கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையின் துப்பாக்கியால் சாதனாவை சுட்டு கொன்றுவிட்டு, உடலை ஏசி அறையில் வைத்துள்ளார். துர்நாற்றம் வீசாமல் இருக்க ரூம் பிரஷ்னரையும் அடித்துள்ளார். இதையறிந்த 10 வயது தங்கையை கொன்றுவிடுவேன் என மிரட்டி, 3 நாட்கள் அறையில் பூட்டி வைத்துவிட்டு, நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து மது விருந்து வைத்துள்ளார். இந்நிலையில், துர்நாற்றம் வீசியதால், ராணுவத்தில் பணியாற்றும் சிறுவனின் தந்தைக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர்.  இதையடுத்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, சாதனா அழுகிய நிலையில் கிடந்துள்ளார். அப்போது, வீட்டுக்கு வந்த எலக்ட்ரீசியன் தான் கொன்றுவிட்டதாக சிறுவன் கூறியுள்ளான். ஆனால், உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரித்த போது, சிறுவன் உண்மை அனைத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ப‌ப்ஜி விளையாடியதை தட்டிக்கேட்டதால் தாயையே கொலை செய்துவிட்டு, நாடகம் ஆடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Related posts

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டு கொலை

குஜராத் தொழிற்பேட்டைகளில் நிலம் ஒதுக்கீட்டில் பாஜ அரசு மோசடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ராஜ்பவனில் உள்ள போலீசார் உடனே வெளியேற மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு