உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ₹5 லட்சம் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை, ஏப். 13: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விருத்தாச்சலம் ரோடு நாச்சியார் பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவை சேர்ந்த தோட்டக்கலை உதவி இயக்குனர் முரளி மற்றும் காவலர் செல்வகுமார் ஆகியோர் மத்திய ஆயுத காவல் படையினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற தினேஷ் என்பவரை சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூபாய் 5 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் உளுந்தூர்பேட்டை கிளை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு