உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம்

 

தஞ்சாவூர் டிச.24: தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பயிற்சி வகுப்பு, மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் அடைக்கலசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் அசோக்குமார் கொடியேற்றி வைத்தார். மாவட்ட இணை செயலாளர் அருண்குமார் நன்றி கூறினார். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மேல்நிலை வகுப்புகளுக்கு அகமதிப்பெண் வழங்குவதை போல 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் அடைவு திறன்களுக்கு அக மதிப்பெண் கட்டாயம் வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் ஆண்டு பொது தேர்வு பணியின் போது பணி மூப்பு அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியின் போது பணி மூப்பு அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு, மருத்துவ காப்பீடு அடையாள அட்டைகளை கருவூலத்திலிருந்து பெற்று வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்