உப்பிலியபுரம் அருகே வாலிபரை பீர்பாட்டிலால் குத்தியவருக்கு வலைவீச்சு

துறையூர், செப்.12: உப்பிலியபுரம் அருகே கொப்பம்பட்டியில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திகாயம் ஏற்படுத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். உப்பிலியபுரம் அருகே கொப்பம்பட்டி அருந்ததியர் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சுரேஷ் (22). இவர் நேற்றுமுன்தினம் மாலை அந்தப் பகுதியில் உள்ள விநாயகர்கோயில் கட்டையில் அமர்ந்திருந்தாராம். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் நோபில் (42) என்பவர் அங்கு அமர்ந்து பீர் குடித்தாராம். அப்போது நோபிலுக்கும், சுரேஷுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆத்திரமடைந்த நோபில் பீர் பாட்டிலை உடைத்து சுரேஷின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் ரத்தக்காயமடைந்த அவருக்கு துறையூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான தகவலின்பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள நோபிலை தேடி வருகின்றனர்.

Related posts

கோவில்பட்டியில் 113வது நினைவுதினம் வாஞ்சிநாதன் படத்திற்கு மரியாதை

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் நெடுஞ்சாலையில் வைத்துள்ள பேரிகார்டால் விபத்து அபாயம்

தூத்துக்குடி சண்முகபுரம் சவுண்ட் சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து