இளையான்குடியில் நீட்தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம்

இளையான்குடி, நவ.27: இளையான்குடியில் நீட்தேர்வை ரத்து செய்ய கோரி, திமுக சார்பில் கையெழுத்து இயக்க முகாம் நடைபெற்றது. இளையான்குடி கலைக்கல்லூரியில் நடைபெற்ற முகாமில் எம்எல்ஏ தமிழரசி கலந்து கொண்டு, நீட்தேர்வால் மாணவ,மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்பு, மற்றும் மோசடிக் குறித்து மாணவிகளிடம் பேசினார். பின்னர் செல்போன்களில் நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலைத்தளத்தில் தங்களது பெயர், மாவட்டம், தொகுதி மற்றும் கையெழுத்து ஆகியவற்றுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

முகாமில் முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜுமுதின், இளையான்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், பேரூராட்சி துணை தலைவர் இப்றாகீம் மற்றும் மாவட்ட விவசாய அணி காளிமுத்து, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கிங் கார்த்திக், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் தமிழ்வாணன், சிவமணி, யோகேஸ்வரன், மற்றும் முருகேசன், நைனா முகம்மது, மலைமேகு, கருணாகரன், சேதுபதி துரை, ரவிச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்