இலங்கையில் இருந்து சென்னைக்கு ‘விக்’கில் 525 கிராம் தங்கம் கடத்திய 3 பெண்கள் கைது

சென்னை:  இலங்கையில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில், சென்னையை சேர்ந்த 3 பெண்கள் ஒரு குழுவாக வந்தனர். அவர்கள் தங்களிடம், சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றனர். சந்தேகத்தின் பேரில், பெண் சுங்க அதிகாரிகளை வரவழைத்து, அந்த 3 பெண்களையும் மடக்கி, தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் அணிந்திருந்த ‘விக்’ எனப்படும் அலங்கார கூந்தலில் தங்க வளையல்கள், சிறிய தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் உள்ளாடைகளில் தங்கப்பசைகள் அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்களை மறைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர். 3 பேரிடம் இருந்தும் 525 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ₹23 லட்சம். இதையடுத்து  3 இளம்பெண்ணை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது

கோவையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம் தொழிலதிபரிடம் ஹவாலா பணமா? காரை மறித்து கொள்ளை முயற்சி: ஆயுதங்களுடன் தாக்கிய ராணுவ வீரர் உட்பட 4 பேரிடம் விசாரணை

விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம் பாலியல் தொழிலில் ஈடுபடும்படி நிர்பந்தித்த காதலன் கொலை: தப்பி ஓடிய காதலி கைது