இப்தார் நோன்பு திறப்பு

 

திருச்சி, ஏப்.7: திருச்சி அயர்ன் மற்றும் ஸ்டீல் மெரச்சன்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பாலக்கரை ஸ்ரீ மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு TISMA தலைவர் காதர் இப்ராஹிம் தலைமை வாகித்தார். செயலாளர் சிராஜுதீன் வரவேற்பு நிகழ்த்தினார். துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் முஹம்மது காசிம், இணைச்செயலாளர்கள் இப்ராஹிம், காஜாமைதீன் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு வணிகளின் பேரமைப்பு மாநில துணை தலைவர் K.M.S.ஹக்கீம், மண்டல தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.ஹஜ்ரத் முகம்மது ஷரீப் யுசூபி தொழுகை மற்றும் துவா சிறப்புரை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் TISMA உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் லியாகத் அலி நன்றி கூறினார்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு