இந்நிகழ்வானது கடந்த மே 2ம் தேதி தொடங்கி எதிர்வரும் 20 நாட்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி பகுதியிலும் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னமராவதியில் சிலம்பம் போட்டியில் வென்ற அணிக்கு கோப்பை பரிசு

 

பொன்னமராவதி: பொன்னமராவதியில் மாவட்டங்களுக்கிடையே நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பரிசு மற்றும் சான்றிதல் வழங்கினார். பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் திடலில் அடைக்கலங்காத்தார் சிலம்ப பாசறை கராத்தே பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிலம்பாட்ட கழகழம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இணைந்து நடத்தும் 40ம்ஆண்டு சிலம்பப்போட்டி நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சுப்பையா தலைமை வகித்தார்.

சிவகங்கை மாவட்ட தலைவர் பிரபு, செயலாளர்கள் சத்தியமூர்த்தி, விவோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி. நகர செயலாளர் அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், ஊராட்சி தலைவர் கீதாசோலையப்பன் ஆகியோர் பேசினர். தமிழக சட்டஅமைச்சர் ரகுபதி சிலம்பப்போட்டியில் முதல் பரிசு பெற்ற பொன்னமராவதி ஏகே சிலம்பப்பாசறை அணியினரும், இரண்டாம் பரிசை கறம்பக்குடி ராஜாகுரு சிலம்பப்பாறை, மூன்றாவது காரைக்குடி தமிழன் சிலம்ப்பாசறை ஆகிய அணிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதனை தொடர்ந்து தனிநபர் போட்டிகளில வெற்றி பெற்றவர்களுக்கு சான்று வழங்கி பேசினார். அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்