ஆலத்துடையான்பட்டியில் முழுநேர ரேஷன் கடை திறப்பு

 

துறையூர், பிப்.10: திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள ஆலத்துடையான்பட்டியில் முழுநேர ரேஷன் கடையை ஸ்டாலின்குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார். உப்பிலியபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலத்துடையான்பட்டியில் 1000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் உள்ளனர். இதனால் இக்கிராம மக்கள் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இப்பகுதி மக்கள் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கேற்ப ரேஷன் கடையை இரண்டாகப் பிரித்து முழு நேர ரேஷன் கடை தங்கள் பகுதியில் அமைத்து தரக்கோரி சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அப்பகுதியில் 563 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற முழுநேர ரேஷன் கடையை ஸ்டாலின்குமார் எம்எல்ஏ திறந்து வைத்து ரேஷன் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் அசோகன், ஊராட்சி தலைவர் ராஜசேகரன், துணைத்தலைவர் பிரேமா, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்