ஆற்றில் மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல்

ஆர்.எஸ்.மங்கலம்,ஏப்.7: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோட்டைகரை ஆற்றில் அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்து ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து திருபாலைக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குலமணிக்கம் கிராமத்தில் உள்ள கோட்டக்கரை ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக போலீசாருக்கு கோட்டக்கரை ஆற்றுப்படுகை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆற்றுக்குள் இருந்து வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்ய முயன்ற போது, வாகனத்தை ஓட்டி வந்த நபர் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி விட்டார்.

போலீசார் வாகனத்தை தணிக்கை செய்து பார்த்தபோது வாகனத்தில் 1 யூனிட் ஆற்று மணல் இருந்ததை கண்டு பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். வாகனத்தை ஒட்டி வந்த நபர் பற்றி விசாரித்த போது, எஸ்.ஆர்.மணக்குடியை சேர்ந்த அரவிந்த் (28)என்பது தெரிய வந்துள்ளது. பகவதி மங்கலம் விஏஒ பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில், திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்