ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு காவல்நிலையத்தை விசிக முற்றுகை

 

பொன்னமராவதி,மார்ச் 9: பொன்னமராவதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஆட்டோ ஸ்டாண்டு அருகில் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு பொன்னமராவதி காவல்நிலையத்தில் அனுமதி கோரியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெறும் நேரத்தில் பொன்னமராவதி காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து விசிக வினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யாமல் விசிகவினர் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த வாடகை மைக் செட், ஸ்பீக்கர், சாமியான பந்தல் 100 நாற்காலி உள்ளிட்ட பொருட்களை காவல் நிலையத்திற்கு போலீசார் எடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மாவட்டச்செயலாளர் வெள்ளைநெஞ்சன் தலைமையில் நிர்வாகிகள் காவல்நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்