ஆயுதபூஜையை முன்னிட்டு வாகன ஓட்டுனர்கள் 6000 பேருக்கு சீருடை

 

காரைக்குடி,அக்.17: கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சொந்தநிதியில் 17வது ஆண்டாக ஆட்டோ, கார், ஜேசிபி ஓட்டுனர் 6000 பேருக்கு வழங்கப்படும் சீருடைகள் இந்த ஆண்டு சாக்கோட்டை மேற்கு ஒன்றியப் பகுதிகளில் வழங்க ஒன்றிய செயலாளர் டாக்டர் கேஆர்.ஆனந்த், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தனது சொந்தநிதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையை முன்னிட்டு ஆட்டோ, கார், ஜேசிபி, வேன், டிராக்டர் ஓட்டுனர்களுக்கு சீருடைகளை வழங்கி வருகிறார்.

17வது ஆண்டாக இந்த ஆண்டு வரும் ஆயுதபூஜையை முன்னிட்டு 6000 பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சாக்கோட்டை மேற்கு ஒன்றிய பகுதிகளான பள்ளத்தூர், கோட்டையூர், கானாடுகாத்தான், கொத்தமங்கலம், சூரக்குடி, சிறுவயல், நேமம் உள்பட பல்வேறு பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சார்பில் சொந்த நிதியில் வழங்கப்படும் இந்த சீருடைகளை வழங்க ஒன்றிய செயலாளர் டாக்டர் கேஆர்.ஆனந்த், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்