ஆன்லைனில் கடன் பெற்றவரிடம் அத்துமீறல் ஆபாச படங்களுடன் மார்பிங் செய்து பெண்ணுக்கு மிரட்டல்: சிவகங்கை சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த 40 வயது பெண் மொபைலுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் கடன் தருவதாக தொடர் விளம்பரம் வந்துள்ளது. அந்த எண்ணில் பேசியபோது எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கடன் பெறலாம். வட்டி குறைவுதான் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி அவர் குடும்ப தேவைக்காக ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். அசல் மற்றும் வட்டியை தொடர்ச்சியாக கட்டி வந்துள்ளார். ஆனால் சரியாக பணம் கட்டவில்லை எனக்கூறி தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் அப்பெண்ணை மிரட்டியுள்ளனர்.இந்நிலையில் திடீரென அந்த பெண்ணின் படத்தை இணையதளங்களில் உள்ள ஆபாச படங்களுடன் மார்பிங் செய்து அவருடைய உறவினர்களுக்கு அனுப்பி மிரட்ட தொடங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், இது குறித்து சிவகங்கை எஸ்பி செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். அதன்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மூலம் மெசேஜ் அனுப்பி வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவது, ஆபாச படங்களுடன் இணைத்து மிரட்டுவது என பெண்களை குறிவைத்து நடக்கும் மோசடிகள் சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வருவதால், சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது….

Related posts

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது

கோவையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம் தொழிலதிபரிடம் ஹவாலா பணமா? காரை மறித்து கொள்ளை முயற்சி: ஆயுதங்களுடன் தாக்கிய ராணுவ வீரர் உட்பட 4 பேரிடம் விசாரணை

விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம் பாலியல் தொழிலில் ஈடுபடும்படி நிர்பந்தித்த காதலன் கொலை: தப்பி ஓடிய காதலி கைது