ஆண்டிபட்டியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா

 

ஆண்டிபட்டி, ஜன. 22: ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று மாவட்ட சமூக நலத்துறை ஆரோக்கிய அகம் மற்றும் தேன்சுடர் பெண்கள் இயக்கம் இணைந்து தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடத்தப்பட்டது. மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சியாமளா தலைமை வைத்தார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, தேன்சுடர் பெண்கள் இயக்க தலைவர் சரிதா, பள்ளி செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். நிகழ்வில் குழந்தை திருமணம் நடப்பதற்கு காரணம் பெற்றோர்களே எனவும், குழந்தைகளே எனவும் குழந்தைகளை பட்டிமன்றம் நிகழ்த்தினார்கள்.

ஆரோக்கிய அகத்தின் துணை இயக்குனர் முருகேசன் மற்றும் ஆரோக்கிய அகத்தின் ஆலோசகர் சதீஷ் சாமுவேல் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.  குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தேன்சுடர் பெண்கள் இயக்கத்தின் செயலாளர் பெருமாள்தாய், பொருளாளர் பாண்டீஸ்வரி, சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக சாதனா நன்றியுரை கூறினார். இதில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது