ஆட்டோ டிரைவர் வீட்டில் கொள்ளை

சாயல்குடி, செப்.3: சாயல்குடி அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சாயல்குடி அருகே அம்மன்புரத்தை சேர்ந்தவர் தசரத பாண்டி(45). ஆட்டோ டிரைவரான இவர், தனது இரு குழந்தைகளை கன்னிராஜபுரத்தில் டியூசன் சென்டரில் இறக்கி விட சென்றுள்ளார். இதுபோன்று இவரது மனைவியும் தையல் தைப்பதற்காக வெளியில் சென்றுள்ளார். இரவு வீட்டிற்கு வந்தபோது பீரோவில் இருந்த தங்க மோதிரம், சங்கிலி மற்றும் வெள்ளி கொலுசு திருடு போனது தெரிய வந்தது. புகாரின் பேரில் சாயல்குடி போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்