ஆடு திருட்டு; 2 பேர் மீது வழக்கு

 

திருச்சி, ஏப்.22: திருச்சி அருகே ஆடு திருடிய வாலிபர் உள்பட 2 பேர் மீது சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே மருதாண்டக்குறிச்சியை சேர்ந்தவர் அருள்முருகன்(47). இவர் வீட்டருகே நேற்று முன்தினம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்றை இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அருள்முருகன் சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்ேபரில் போலீசார் விசாரணை நடத்தி, குளித்தலை தாலுகா காவல்காரன்பட்டியை ேசர்ந்த சிவா (27) உள்பட 2 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்