ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, மே 31: சிவகங்கை, தேவகோட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி பட்டதாரி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என அறிவிக்க வேண்டும். மாறுதல் கலந்தாய்வுகளை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமரேசன், ஞான அற்புதராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணதாசன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் மாவட்ட தலைவர் நரசிம்மன், நிர்வாகிகள் ஜான் அந்தோனி, ரவி, சிங்கராயர், சகாயதைனேஸ், பாலகிருஷ்ணன், ஜெயக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தேவகோட்டையிலும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு

மாணவர் சேர்க்கைக்கு 20ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்