ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்

திருச்சி.ஏப்.4: ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட செயற்குழு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளை, மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட தலைவர் சேவியர் பால்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முத்துராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜாக்டோ, ஜியோ போராட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பேசி பேசினார்.

அவரைதொடர்ந்து மாவட்ட செயலாளரும், மாநில பொருளாளருமான நீலகண்டன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக தமிழக முதலமைச்சர் நிறைவேற்றி ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வருகிற மே மாதம் உபரியாக உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை கலந்தாய்வு நடத்தி அவர்களது பணியை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொருளாளர் நீலகண்டன், மாநில துணைச் செயலாளர் சேவியர் பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்

காரியாபட்டி அருகே தனியார் சோலார் பிளான்ட்: கிராம மக்கள் எதிர்ப்பு

சாத்தூரில் உள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு