ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு

சாயல்குடி, நவ.17: சாயல்குடி அருகே வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டு, பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பிலான் பஞ்சாயத்து தலைவர் உட்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாயல்குடி அருகே ஒப்பிலான் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறைக்கு சொந்தமான இடங்களை ஒப்பிலான்-வாலிநோக்கம் சாலையில் அப்பகுதியினர் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, குடியிருப்புகள் அமைத்து வசித்து வருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் வாகனங்களில் சென்றனர். அதிகாரிகள் வருவதைக் கண்ட ஒப்பிலான் கிராம மக்கள் அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சாயல்குடி-வாலிநோக்கம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா புகாரின் பேரில், ஒப்பிலான் பஞ்சாயத்து தலைவர் ஹக்கீம், ஜமாத் தலைவர் அபுபக்கர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 50 பேர் மீது சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்