அறிவியல் இயக்க கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

 

காளையார்கோவில், ஜூலை 29: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக காளையார்கோவிலில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் துளிர் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆனந்தி சென்னை கணிதவியல் நிறுவனமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து தயாரித்த துளிர் கட்டுரை தொகுப்பு நூலை வெளியிட முதல் பிரதியை சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் மலைராஜ் பெற்றுக்கொண்டார்.

இரண்டாம் பிரதியை காளையார்கோவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் பெற்றுக்கொண்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன், வட்டாரச் செயலாளர் ஆரோக்கிய ஜெய சாலமன், வட்டார கவுரவத் தலைவர் நாகலிங்கம், அறிவியல் ஆசிரியர்கள் சரவணன், முருகன், கார்த்திகா லெட்சுமி, புஷ்பலதா, குருசித்ரா, பூமாதேவி, ஷிபா, அமுதா, அருணாபேபி, மீனாட்சி, ஹெப்சிபா, முத்து லெட்சுமி, சரோஜாபாய், சுமதி கலந்து கொண்டனர். இந்த நூல் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது