அறந்தாங்கி அடுத்த மணமேல்குடியில் ஆசிரியர்களுக்கு சுகாதார பயிற்சி முகாம்

 

அறந்தாங்கி,நவ.25: அறந்தாங்கி அடுத்த மணமேல்குடி ஒன்றியத்தில் கிராமாலயாவின் சார்பாக ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சுகாதார பயிற்சி அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் கிராமாலயா இணைந்து சுகாதாரப் பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் இந்திராணி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலை வகித்தார்.

கிராமாலயா தலைமை அலுவலர் இளங்கோவன் அனைவரையும் வரவேற்று பேசினார். பயிற்சியில் தன் சுத்தம், சுகாதாரமான கழிப்பறை, சுகாதாரமான குடிநீர், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் உமா மகேஸ்வரன் மற்றும் கிராமாலயா புதுக்கோட்டை சுகாதார பணியாளர்கள் சத்யா மற்றும் மரியா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். இப்பயிற்சியில் 27 பெண்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பக்ரீத் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர் திரளாக பங்கேற்பு

காங்கயத்தில் அரசு பேருந்து-கார் மோதல்

கேரளாவிலிருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு அன்னாசி பழம் வரத்து அதிகரிப்பு