அரியலூரில் பள்ளி திறப்பு ஆயத்த கூட்டம்

அரியலூர், மே31: அரியலூர் மாவட்டத்தில் பள்ளி திறப்பதற்கான தேதிக்கு முன்னதாக செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து பராமரிப்பு ஆயத்த கூட்டம் நடைபெற்றது.அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகள் வருகின்ற ஜூன் 7-ம் தேதி திறக்கப்பட இருப்பதால், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த ஆயத்த கூட்டம் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் .விஜயலட்சுமி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜப்பிரியன் மற்றும் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பள்ளி வளாகம் வகுப்பறை குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவைகளை சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர்கல்விக்கு விண்ணப்பிப்பது சார்பான வழிமுறைகள் மற்றும் emis ல் மேற்கொள்ளவேண்டிய பதிவுகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் .தண்டபாணி, சாந்தா உட்பட்ட பலரும் கலந்து கொண்டனர் .

Related posts

குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது

முதியவர் மயங்கி விழுந்து சாவு

தோவாளை அருகே நான்குவழிச்சாலையில் விபத்து ஏற்படுத்தும் தடுப்புகள் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட கோரிக்கை