அரிமளம் அருகே நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்

திருமயம்,ஆக்.2: அரிமளம் அருகே 3 சென்ட் நிலத்திற்காக இருதரப்பினர் மோதிக்கொண்டதில் 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ராயவரம் ஏ.செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிமாறன், பன்னீர்செல்வம். இருவரும் அருகருகே வீட்டில் வசித்து வரும் நிலையில் இவர்களுக்குள் 3 சென்ட் நிலம் ஒன்று கடந்த 10 ஆண்டுகளாக பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. இதனிடையே இந்த பிரச்சனைக்குரிய நிலம் தொடர்பாக மீண்டும் நேற்று முன்தினம் பிரச்சனை எழுந்தது. இதில் இரு பிறப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் மரக்கட்டைகளால் கடுமையாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்த நிலையில் காயமடைந்தவர்கள் திருமயம், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தனித்தனியே சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இது தொடர்பாக இருதரப்பினரும் அரிமளம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இரு தரப்பைச் சேர்ந்த 11 பேர் மீது அரிமளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்