அரசு மருத்துவமனைகளில் டயாலிஸிஸ் சிகிச்சை பிரிவு தொடங்க கோரிக்கை

 

தேவாரம், பிப். 10: தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் டயாலிஸிஸ் சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம், போடி, சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட ஊர்களில் டயாலிஸிஸ் சிகிச்சை இல்லை. டயாலிஸிஸ் என்பது, கிட்னி பாதித்தவர்களின் ஆயுள் காலம் அதிகரிக்க உதவிடும் சிகிச்சை முறையாகும். தேனி மாவட்டத்தில் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு தினமும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

தவிர பெரியகுளம், கம்பம் சீமாங் சென்டர்களாக உள்ளன. இவைகளில் டயாலிஸிஸ் செய்யப்படுகிறது. உத்தமபாளையம். சின்னம்னூர், போடி, ஆண்டிபட்டி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் இல்லை. தேனி மாவட்டத்தில் 130 கிராம பஞ்சாயத்துக்கள். இதன் உட்கடை கிராமங்கள் என 300க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு சுகர், பிரசர், கிட்னி பாதிப்பு என நோயாளிகள் அதிகம் உள்ளனர். குறிப்பாக டயாலிஸிஸ் செய்யும் அளவிற்கு நோயின் தீவிரமாகும்போது நோயாளிகள் திண்டாடுகின்றனர்.

இவர்களுக்கென தனியாக ஆட்டோக்கள், கார் என வாடகைக்கு வைத்து தேனிக்கு செல்ல வேண்டும். எனவே 24 நேரமும் டயாலிஸிஸ் செய்யும் வசதியை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். எனவே அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டயாலிஸிஸ் சிகிச்சை பிரிவு தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்