அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

வீரவநல்லூர், மார்ச் 6: பாளை புதிய பஸ் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் பாபநாசம் நோக்கி சென்றது. பஸ்சை விகேபுரத்தை அடுத்த அடையகருங்குளத்தைச் சேர்ந்த ராஜன்(50) என்பவர் ஓட்டிச் சென்றார். பத்தமடை பறையன்குளம் விலக்கு அருகே வரும்போது சாலையில் டவுசருடன் நின்று கொண்டிருந்த மர்மநபர் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்து சேதப்படுத்தி தப்பியோடியுள்ளார். இதுகுறித்து பஸ் டிரைவர் ராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பத்தமடை போலீசார் வழக்குபதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்த போது பத்தமடை மங்கையர்கரசி தெருவை சேர்ந்த ராமானந்தம் மகன் கவுதம்(25) பஸ் மீது கல் வீசியது உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து பத்தமடை போலீசார் கவுதமை கைது செய்து பாளை சிறையிலடைத்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு