அரசு பள்ளியில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்: மாவட்ட கலெக்டர் தகவல்

சிக்கமகளூரு: பசவனஹள்ளி அரசு மகளிர் பள்ளியில் அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார். சிக்கமகளூரு டவுன் பசவனஹள்ளியில் அரசு மகளிர் பள்ளி உள்ளது. இந்த மகளிர் பள்ளியில் சுமார் 500 அதிகமான  மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு சென்ற மாவட்ட கலெக்டர் ரமேஷ் மற்றும் நகரசபை தலைவர் வேணுகோபால் இருவரும் பள்ளி மாணவ மாணவிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட கலெக்டர் ரமேஷ்  பள்ளிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கூடுதல் கட்டிடங்கள் தேவை இருந்தால் அவை கட்டிக்கொடுக்கப்படும். ஸ்மார்ட் கிளாஸ் பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என   மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்தார். அதேபோல தற்போது ஹிஜாப் பிரச்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் மாணவர்கள் பாடத்தில் மட்டும் அக்கறை காண்பித்து  படிக்க வேண்டும். நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என  அறிவுரை கூறினார்….

Related posts

மக்களவையில் துணை சபாநாயகர் பதவி தராவிட்டால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி போட்டி: மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு

லஞ்சம் வாங்கி கொண்டு வினாத்தாள் கசிவு, விடைத்தாளில் திருத்தம் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மை

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி