அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

 

குளித்தலை, ஏப். 5: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர் மலையில் சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும், 1017 படி உயரம் கொண்ட ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 12ம் நாள் நடைபெறுவது வழக்கம். இக்கோயில் காவிரி தென்கரை சிவத்தலங்களில் முதன்மையானதும் தேவர்களாலும் முனிவர்களாலும் ஆரிய மன்னராலும் வைரப் பெருமாள் சிற்றராயர் என்ற பக்தர்களாலும் பூஜை பெற்றதும், அப்பர் என்ற திருநாவுக்கரசரால் தேவார திருப்பதிக பாடல் பெற்றது.

ஐவர் மலை என போற்றப்படும் அய்யர்மலை சுரும்பார் குழலி உடனுறை ரத்தினக்கிரீஸ்வரர் சுவாமி கோயிலில் சித்திரை தேர் திருவிழா நேற்று கால்கோல் விழாவுடன் தொடங்கியது. முதல் நாள் திருவிழா சித்திரை 1ம் தேதி (ஏப்ரல் 14ம் தேதி) மலை உச்சியில் கொடியேற்றத்துடன் 12 நாள் திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து சுவாமி தினந்தோறும் புறப்பாடு நடைபெற்று மலையை சுற்றி வந்து பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார்.

மேலும் இந்த சித்திரை தேர் திருவிழாவில் முக்கிய விழாவாக ஐந்தாம் நாள் திருக்கல்யாண வைபவம், ஒன்பதாம் நாள் ஏப்ரல் 22ம் தேதி காலை 5:30 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவுக்கான ஏற்பாட்டினை இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் ரமணி காந்தன், செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு அமரநாதன் மற்றும் கோயில் குடிப்பாட்டுக்காரர்கள், உபயதாரர்கள் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு