அம்மாபேட்டை கோதண்டராமர் கோயிலில் வெண்ணைத்தாழி சேவை

தஞ்சாவூர், ஏப்.7: அம்மாப்பேட்டை கோதண்டராமர் கோயிலில் ராமநவமி விழாவின் முக்கிய நிகழ்வாக நவநீதகிருஷ்ணன் வெண்ணைத்தாழி சேவை வெகுசிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டையில் கோதண்டராமஸ்வாமி மற்றும் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ராமநவமி பெருவிழா கடந்த 30ம் தேதி ஏகாந்த சேவையுடன் வெகு சிறப்பாக தொடங்கியது. தொடர்ந்து தினம் தோறும் பல்லக்கு. சேஷ வாகனம்,. கருடசேவை, ஹனுமார் வாகனம், யானை வாகனம், .திருக்கல்யாணம் என விசேஷங்கள் நடைப்பெற்றன. நேற்று முக்கிய நிகழ்வாக வெண்ணைத்தாழி நவநீத சேவை நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தவழ்ந்த நவ கிருஷ்ணன் அலங்காரத்துடன் எழுந்தருளினார். கோயில் மண்டபத்தில் நவநீத கிருஷ்ணனுக்கு சோடப உபசாரம் நடந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பல்லக்கு கோவிலை வலம் வந்த நவநீத கிருஷ்ணர் அம்மாப்பேட்டை நகரில் வீதி உலா வந்தது. வீடுகள் தோறும் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்